பால்பண்ணையின்  பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன 
          
            
              - ஒரு       கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
 
              - ஒரு       பருவக் காலத்தில் பால் தரும் நாட்கள் / பால் உற்பத்திக் காலம்
 
              - பால்       உற்பத்தி நிலைத்தன்மை
 
              - முதல்       கன்று ஈனும் வயது
 
              - சினைப்       பருவம்
 
              - பால்       வற்றிய நாட்கள்
 
              - அடுத்தடுத்த       கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி
 
              - இனப்பெருக்கத்       திறன்
 
              - தீவனம்       உட்கிரகிக்கும் நாள்
 
              - நோய்       எதிர்ப்புத் திறன்
 
             
           
          1.ஒரு பருவத்தில்  பால் உற்பத்தி அளவு 
             
            ஒரு  கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே ஒரு பருவ பால் உற்பத்தி  ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்களை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு.  இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இடைவெளி மற்றும் பாலின் நிலைத்தன்மையைப்  பொறுத்தது. முதல் பருவத்திலிருந்து போகப்போக 3 - 4 வது பருவம் வரை பால் உற்பத்தி  30 - 40 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதன் பின்பு குறைய ஆரம்பிக்கும். இரு இனங்களுக்கிடையே  பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால் உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்பட வேண்டும்.  4 சதவிகிதம் கொழுப்பு சரிசெய்த பால் = 0.4 மொத்த பால் + 15 மொத்தக் கொழுப்பு கன்று ஈன்ற (Parturitiion) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற  2 - 4 வாரங்களுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக்கும். 
            இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக  உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக  நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். 
          2.பால்  உற்பத்திக் காலம் 
             
            ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக்  காலம் ஆகும். சராசரி பால் உற்பத்தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய  காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். குறுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக்  காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக்குறைந்தளவே  இருக்கும். 
             
            3.பால்  உற்பத்தியின் நிலைத்தன்மை. 
             
            அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்துக்  கொள்ளவேண்டும். முதல் 2-4 வாரங்களில் வரும் பாலின் உற்பத்தி விரைவில் குறைந்து விடாமல்  பார்த்துக் கொள்ளுவதே நிலைத்தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இருக்குமாறு பராமரித்தல்  அதிக உற்பத்திக்கு உதவும். 
             
            4.முதல்  கன்று ஈனும் வயது 
             
            அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று.  இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள்.  எருமை மாடுகளில் மூன்றரை வருடங்கள் ஆகும். முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருந்தால்  பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு குறைவதால்  பால் பருவமும் குறையும். 
             
            5.சினைக்காலம்ள 
             
            இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும்  உள்ள இடைவெளியாகும். சரியான நேரத்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்தத்தைப் போக்கிப்  பசுவை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இனப்பெருக்க உறுப்புக்கள் சரியான வயதில் தன்னிலை  எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினைக்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடித்தால்,  அடுத்த கன்று ஈனுவதும் தள்ளிப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின்  ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான  இடைவெளியுடன் இருத்தல் வேண்டும். 
             
            6.பால்  / மடி வற்றிய நாட்கள் 
             
            இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள்  வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது  ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய  இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும்  கன்றும், ஆரோக்கியமாக இருக்காது. 
             
            7.கன்று  ஈனும் இடைவெளி 
             
            அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று  ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு  ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம்  ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும். 
             
            8.இனப்பெருக்கத்  திறன் 
             
            பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப்  பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து  அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி,  சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும்  இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள்  அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது. 
             
            9.தீவனம்  உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன் 
             
            மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப்  பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும். 
             
            10.நோய்  எதிர்ப்பு 
             
            இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன்  மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம். 
             
          (ஆதாரம் : http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf) 
           |